Thursday, 6 November 2014

செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu Chikken Gravy)

தேவையான பொருட்கள் :
சிக்கன்-1 கிலோ
பெரிய வெங்காயம்-2
அரைக்க :
சின்ன வெங்காயம்-10
பூண்டு-15 பல்
கிராம்பு-3
வறுத்து பொடியாக அரைக்க :
சோம்பு -2 ஸ்பூன்
சீரகம் -3 ஸ்பூன்
மிளகு-1 ஸ்பூன்
குறிப்பு:
கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றி பின் அதில் சோம்பு போட்டு வறுத்து அதன் பின் சீரகம் பின் மிளகு போட்டு கருக விடாமல் வறுக்கவும்.பின் அதை ஆற விட்டு mixiயில் dryஆக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
தாளிக்க:
எண்ணெய் -தேவையான அளவு
சோம்பு
பட்டை
கிராம்பு
கல்பாசி
அன்னாசி பூ
பொடி வகைகள்:
மிளகாய் பொடி -3 தேக்கரண்டி
சாம்பார் பொடி -2தேக்கரண்டி
மஞ்சள் தூள் -சிறிதளவு
உப்புதேவையான அளவு.
செய்முறை :
                          1.சிக்கனை கழுவி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
                          2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து பின் பொடியாக நறுக்கிய பெரியவெங்காயத்தையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
                          3.அதன் பின்பு அரிது வைத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு ,கிராம்பு கலவையை போட்டு வதக்கவும்.
                          4.பின் வறுத்து பொடியாக வைத்துள்ள சீரகம்,சோம்பு,மிளகு கலவையையும்
போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.செட்டிநாடு சிக்கன் கிரேவியின் சிறப்பே இது தான்.
                          5.பின் சிக்கனை போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
                          6.அதன் பின் மேலே கூறிய பொடி வகைகளையும் போட்டு  வதக்கி தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
                          7.சிக்கன் முக்கால் பதம் வெந்தவுடன் உப்பு போடவும் .
                          8.சிக்கன் வெந்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விட்டு பின்  கிரேவி பதம் வந்தவுடன் இறக்கவும்.
பிரியாணி,சாதம்,சப்பாத்தி,இட்லி,தோசை,தேங்காய் பால் சாதம் மற்றும் பல உணவு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் .

செட்டிநாடு நண்டு குழம்பு (Chettinad Nandu Kuzhambu)

தேவையான பொருட்கள்:

நண்டு – ஒரு கிலோ
சோம்பு – 2 தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
வெங்காயம் – 3
நாட்டுத் தக்காளி – 4
மிளகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மல்லித் தூள் – 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கி பிறகு அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதித்த பிறகு நண்டை போட்டு மூடிவிட வேண்டும். நண்டு நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கி மூடி வைக்க வேண்டும்.
 சுவையான செட்டிநாடு நண்டு குழம்பு ரெடி.

இறால் பெப்பர் ப்ரை (Prawn Pepper Fry)

தேவையான பொருட்கள்:

இறால் – 250 கிராம் (சுத்தமாக கழுவியது)
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – 25 கிராம்
பூண்டு – 25 கிராம்
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிது
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

                     முதலில் ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள இறாலைப் போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஊற வைக்க வேண்டும்.
                     பின் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை ஓரளவு அரைத்து, அதனை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
                     பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
                     பின்னர் அதில் இஞ்சி கலவையை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, வேண்டுமானால் தேவையான அளவு உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை 2-3 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும்.
                    குறிப்பாக, இறால் அளவுக்கு அதிகமாக வெந்துவிடக்கூடாது.
                     இறால் பெப்பர் ப்ரை ரெடி!!!
                     இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

கேஎஃப்சி சிக்கன் (KFC CHICKEN)

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)
இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
மாவிற்கு

மைதா – 1 1/2 கப்
முட்டை – 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கோட்டிங்கிற்கு

பிரட் தூள் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:

                        முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து
வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதுபோன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி!!!